பொறளையில் துப்பாக்கிச் சூடு ; தப்பிச்சென்ற நபர்கள்
பொறளையில் காதர் நானாவத்த பகுதியில் இன்று (22) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றது.
அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் இந்த துப்பாக்கிச் சூட்டில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்ததையடுத்து அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சம்பவத்துக்குப் பிறகு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக CCTV காட்சிகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.