புலம்பெயர்வோர் படகு கவிழ்ந்து விபத்து: மூன்று சகோதரிகள் பலி
லிபியா நாட்டிலிருந்து இத்தாலி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த புலம்பெயர்வோர் படகொன்று கவிழ்ந்ததில் மூன்று சகோதரிகள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
புலம்பெயர்வோர் படகு கவிழ்ந்து விபத்து
வெள்ளிக்கிழமை இரவு, லிபியாவிலுள்ள Zuwara என்னுமிடத்திலிருந்து இத்தாலி நோக்கி புலம்பெயர்வோர் படகொன்று புறப்பட்டுள்ளது.
கடலில் அலைகள் 5 அடி உயரம் வரை எழும்ப, அலைக்கழிக்கப்பட்ட படகு திடீரென கவிழ்ந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர் மூன்று கர்ப்பிணிப்பெண்கள், சிறுவர் சிறுமியர் மற்றும் ஒரு ஏழு மாதக் குழந்தை உட்பட 65 பேரை மீட்டுள்ளனர்.
ஆனால், படகு கவிழ்ந்ததில், முறையே 9,11 மற்றும் 17 வயதுடைய மூன்று சகோதரிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார்கள், மேலும் ஒருவரைக் காணவில்லை.
அந்தப் படகில் அளவுக்கு அதிகமான புலம்பெயர்வோர் ஏற்றப்பட்டிருந்ததாக தொண்டு நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.