ரணிலின் பிணையின் பின்னர் அநுர வழங்கிய செய்தி
ஊழல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்பதை வலியுறுத்தி, அனைத்து குடிமக்கள் மீதும் சட்டம் சமமாக நடைமறைப்படுத்தும் என்று ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர், இதனை கூறியுள்ளார்.
செப்டம்பர் மாதம் தொடங்கி, புதிய சட்டம் இயற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரசு வீடுகளும் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.
பரந்த முயற்சிகள்
பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கும் நீதியை உறுதி செய்வதற்கும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் எந்தவொரு நபரும் தனது நிர்வாகத்தின் கீழ் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.