;
Athirady Tamil News

AI சொன்னதால் தற்கொலை செய்து கொண்ட 13 வயது சிறுவன் – கதறும் பெற்றோர்!

0

சாட்ஜிபிடியுடன் பேசி வந்த 13 வயது சிறுவன் திடீரெனத் தற்கொலை செய்து கொண்டார்.

ChatGPT ஆலோசனை
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த 16 வயதான இளைஞர் மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சனைகளைக் கையாள்வது தொடர்பாக, அவர் ChatGPT-யிடம் ஆலோசனை கேட்டுள்ளார். மனநலப் பிரச்சனைகளுக்காகச் சிகிச்சை எடுத்துவந்த அந்த இளைஞர், ChatGPT-யுடன் உரையாடிய பிறகு, தற்கொலைக்குத் தூண்டப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அவரது பெற்றோர் மகனின் தற்கொலைக்குக் காரணமான ChatGPT-ஐ உருவாக்கிய Open-AI நிறுவனம் மற்றும் அதன் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறுவன் தற்கொலை
தனது பெற்றோரின் மதுவை எப்படித் திருட வேண்டும், தற்கொலை முயற்சி தோல்வியடைந்தால் அதற்கான தடயங்களை எப்படி மறைக்க வேண்டும் என்பதை எல்லாம் சாட்ஜிபிடி தங்கள் மகனுக்குச் சொல்லிக் கொடுத்தாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்கொலைக் கடிதத்தை எழுதுவதற்கும் கூட சாட்ஜிபிடி உதவியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக ஓபன் ஏஐ நிறுவனம், ரெயினின் மரணத்தால் வருத்தமடைவதாகவும் யூசர்களுக்கு உதவி எண்கள் வழங்குவது உட்பட முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டே வருவதாகவும் தெரிவித்துள்ளது.

குறுகிய உரையாடல்களில் இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும், நீண்ட உரையாடல்களின் போது சில நேரங்களில் நம்பகத்தன்மையை இழக்கக்கூடும் என்பதை உணர்ந்து கொண்டோம் என குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.