;
Athirady Tamil News

நிந்தவூர் பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு

0

நிந்தவூர் பிரதேச சபையின் 02 ஆவது சபை அமர்வு நடவடிக்கைகள் புதன்கிழமை (27) சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் ஜேபி தலைமையில் ஆரம்பமானது

பின்னர் நிந்தவூர் பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு நடவடிக்கைகள் சபையின் தவிசாளர் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் உப தவிசாளர் சட்டத்தரணி எம் .ஐ .இர்பான் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பங்கபற்றலுடன் ஆரம்பமாகின.

இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் தவிசாளர் உரையுடன் தொடர்ச்சியாக ஏனைய விடயங்கள் இடம்பெற்றன.மேலும் மாதாந்த கூட்டம் நடத்த வேண்டிய திகதி தீர்மானித்தல் முன்மொழிவுகள் உள்ளடங்கலாக இக்கூட்ட அமர்வில் கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் பெறப்பட்டு சபை நடவடிக்கை சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கூட்டத்தில் சபையின் உப தவிசாளர் மற்றும் ஏனைய கெளரவ உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.