;
Athirady Tamil News

பெண்களை தொடக்கூடாது.. தலிபான்களின் உத்தரவால் துயரம்

0

நிலநடுக்கத்தை விடவும் கொடிய தலிபான் அரசின் அடக்குமுறையால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் பெண்களை தூக்க உதவியின்றி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆப்கன் பெண்கள்.

இடிபாடுகளில் சிக்கி உயிருடன் தவித்துக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்த்ததும், அங்கிருக்கும் மீட்புப் பணியாளர்கள் ஓடிச் சென்று பார்க்க முடியுமே தவிர அவர்களை வெளியே தூக்கிவர முடியாது. காரணம். தலிபான்கள் அரசின் உத்தரவு, அதாவது, அந்த பெண்களுக்கு சம்பந்தமுள்ள ஆண்கள் மட்டுமே அவர்களைத் தொட்டுத் தூக்க வேண்டும். இல்லையென்றால், வேறு யாரும் பெண்களை தொட்டுத் தூக்கக் கூடாது என்பதே அந்த உத்தரவு. ஆண் துணை இல்லாத பல குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் பெண் குழந்தைகளின் நிலையையும் நினைத்து பலரும் கலங்கி நிற்கிறார்கள்.

பல நூற்றாண்டுகள் முந்தைய கலாசாரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆப்கனை ஆளும் தலிபான்களின் இந்த உத்தரவால், இடிபாடுகளுக்குள் பல பெண்கள் உயிரோடு சமாதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி வந்ததுமே பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டன. அங்கு பல குடும்பங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில், ஒரு சில நாள்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை தாக்கிய நிலநடுக்கத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பலியாகினர்.

இந்த நிலையில், பெண்களை அவர்களது உறவினர்களான தந்தை, சகோரதரன், கணவர், மகன் மட்டுமே தொட வேண்டும் என்றும், மற்ற ஆண்கள் யாரும் தொடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதில்லாமல், ஆப்கானிஸ்தானில் பெண்கள் யாரும் மீட்புப் பணியிலும் ஈடுபட முடியாது. இப்படியிருக்க, நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்பதும், காயமடைந்த பெண்கள் மருத்துவமனைக்கு வருவதும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.