பிரான்ஸ் கடற்கரை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் உடல்: புலம்பெயர்வோரா?
புலம்பெயர்வோர் பலர் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாயில் பயணிக்க பயன்படுத்தும் கடற்கரை ஒன்றில் இளைஞர் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
புலம்பெயர்வோரா?
வட பிரான்சிலுள்ள Boulogne-sur-Mer என்னும் துறைமுக நகரத்தின் கடற்கரையில், நேற்று காலை இளைஞர் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் இரவு நேரத்தில் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர்வோராக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
அவரது அடையாளம் தொடர்பான எந்த விவரங்களையும் பொலிசார் வெளியிடவில்லை.