;
Athirady Tamil News

299 மில்லியன் ரூபாய் நிதி செலவில் புனரமைக்கப்படவுள்ள குறிகாட்டுவான் இறங்குதுறை

0

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணி மற்றும் இறங்குதுறைக்கான வீதி மறுசீரமைப்பு பணிகள் நாளைய தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதியில் நாளைய தினம் சனிக்கிழமை காலை 09 மணிக்கு நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வில் , துறைமுகங்கள் , நெடுஞ்சாலைகள் , போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

சுமார் 299 மில்லியன் ரூபாய் நிதி செலவில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

நிகழ்வில் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறை சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.