பிரித்தானியாவில் 30 வயதுடைய நபருக்கு நேர்ந்த பரிதாபம்: 6 பேரை மடக்கி பிடித்த பொலிஸார்
பிரித்தானியாவின் லீசெஸ்டரில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 வயதுடைய நபருக்கு நேர்ந்த பரிதாபம்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:37 மணிக்கு கிழக்கு மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை விடுத்த அழைப்பின் பேரில் லீசெஸ்டர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு லீசெஸ்டர்ஷைர்(Leicestershire) காவல்துறையினர் சென்றனர்.
அங்கு 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் கிடப்பதை கண்டனர், இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து லீசெஸ்டர்ஷயர் காவல்துறையினர் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
6 பேர் கைது
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதில் 44 வயது மதிக்கத்தக்க நபர் கொலை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
மீதமுள்ள 24 முதல் 53 வயதுக்குட்பட்ட 5 பேர் மீதும் குற்றவாளிக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.