;
Athirady Tamil News

ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கான போக்குவரத்து அனுமதி

0

தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை போக்குவரத்து விடுமுறை நாளாக கருதி தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினுடைய படகு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருத்த வேலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்தினை இலகுவாக்குவதன் பொருட்டு இக் கூட்டத்திற்கான கோரிக்கையினை அரசாங்க அதிபர் முன்வைத்த போது அதற்குரிய அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிரகாரம் நெடுந்தீவில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு காலை 7.30 மணிக்கு குறிகட்டுவானை சென்றடையும் .குறிகட்டுவானில் இருந்து மீண்டும் காலை 7.30 மணிக்கு நெடுந்தீவு நோக்கி புறப்படும். மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்கு நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு மீண்டும் குறிகாட்டுவானிலிருந்து பிற்பகல் 4.30 மணிக்கு புறப்படும் .

இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து தொடர்பான செயற்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.இளங்குமரன் , வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் யொ.குறுஸ் , வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் ,பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்களது பிரத்தியோக இணைப்பாளர் ஶ்ரீவர்னன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.