;
Athirady Tamil News

அமெரிக்க சதுரங்க கிராண்ட்மாஸ்டர் டேனியல் நரோடிட்ஸ்கி 29ம் வயதில் காலமானார்

0

அமெரிக்க சதுரங்க கிராண்ட்மாஸ்டர் டேனியல் நரோடிட்ஸ்கி (Daniel Naroditsky) திடீரென மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டேனியல் நரோடிட்ஸ்கி தனது 29ம் வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேனியல் நரோடிட்ஸ்கி திடீர் மரணம் அடைந்துள்ளார் என்பது மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நரோடிட்ஸ்கியின் மரணக்காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

காலிஃபோர்னியாவில் பிறந்த நரோடிட்ஸ்கி, 12 வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்றதுடன், 18-வது வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார் — இது உலக சதுரங்க சாம்பியன் பட்டத்திற்கு அடுத்த மிக உயர்ந்த அங்கீகாரம். அவர் சிறுவயதிலிருந்தே சதுரங்க தந்திரங்கள் குறித்து புத்தகங்கள் எழுதி, உலக தரவரிசையில் முன்னேறினார்.

பாரம்பரிய சதுரங்கத்தில் உலக அளவில் முதல் 200 வீரர்களில் இடம் பெற்றதுடன், வேகமான Blitz சதுரங்கத்திலும் சிறந்த திறமையை வெளிப்படுத்தி, உலகின் முதல் 25 வீரர்களில் ஒருவராக நீண்ட காலம் இருந்தார்.

இந்த ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்க தேசிய ப்ளிட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை நரோடிட்ஸ்கி வென்றிருந்தார். கடந்த ஆண்டு உலக ப்ளிட்ஸ் சாம்பியன்ஷிப்பில் அவர் ஒன்பதாவது இடத்தை பெற்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.