வீட்டு காவலாளியிடம் மகனை மன்னிப்பு கேட்க சொன்ன அம்பானி – ஏன் தெரியுமா?
மகனை வீட்டு காவலாளியிடம் அம்பானி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் குறித்து நீதா அம்பானி விவரித்துள்ளார்.
மகனை மன்னிப்பு கேட்க சொன்ன அம்பானி
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம், ரூ.9.55 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவின் முதல் பணக்காரராக முகேஷ் அம்பானி இருந்தாலும், தனது குழந்தைகளை வளர்ப்பதில் மிக கண்டிப்பான தந்தையாகவே இருந்து வந்துள்ளார்.
அவருக்கு ஈஷா என்ற மகளும், ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். முகேஷ் அம்பானி எவ்வாறு கண்டிப்பான தந்தையாக தனது குழந்தைகளை வளர்த்தார் என்பதை அவரது மனைவி நீட்டா அம்பானி Simi Garewal உடனான நேர்காணலில் பேசினார்.
ஒருமுறை அவர்களது மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, வீட்டு காவலாளியிடம் தொலைபேசியில் மிக கடுமையான தோணியில் பேசிக்கொண்டிருந்தார்.
இதனை பார்த்த முகேஷ் அம்பானி, ஆகாஷ் அம்பானியை கண்டித்ததோடு கீழே சென்று காவலாளியிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறினார்.
சமூக அந்தஸ்தை பொருட்படுத்தாமல் அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும் என முகேஷ் தனது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்துள்ளார் என நீதா அம்பானி அந்த நிகழ்வை விளக்கினார்.