;
Athirady Tamil News

அதிகரிக்கப்படும் பாடசாலை நேரம் ; வேலைநிறுத்ததிற்கு தயாராகும் அதிபர்கள், ஆசிரியர்கள்

0

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி கடுமையாக எதிர்த்துள்ளது.

இன்று (24) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆசிரியர்-அதிபர்கள் சங்கங்கள், நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாடசாலை தவணை ஆரம்பித்தவுடன் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

அதிகரிக்கப்படும் பாடசாலை நேரம் ; வேலைநிறுத்ததிற்கு தயாராகும் அதிபர்கள், ஆசிரியர்கள் | School Hours Rise Teachers Protest

கல்வியாளர்களுடன் முறையான ஆலோசனை இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீடிக்கப்பட்ட நேரம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறும் தொடர்புடையவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.