;
Athirady Tamil News

பருத்தித்துறை சந்தையில் இடவசதி போதாது என வியாபரிகள் போராட்டம்

0

பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள் இணைந்து பருத்தித்துறை நகரில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்

நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த மரக்கறிச் சந்தையை , மீன் சந்தை வீதியில் புதிதாக கட்டடம் ஒன்றை நிர்மாணித்து அங்கு வியாபாரிகளை பருத்தித்துறை நகரசபை செயலாளர் தலைமையில் மாற்றம் செய்து வைக்கப்பட்டது.

குறித்த புதிய சந்தைக் கட்டடம் போதிய இடவசதிகள் இல்லை எனவும் மழை நேரங்களில் வெள்ளம் தேங்கி நிற்ப்பதாகவும், அதனால் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் நகரசபை தவிசாளர் உள்ளிட்டோரிடம் மகஜர்களை கையளித்திருந்தனர்.

அது தொடர்பில் நகரசபை அமர்வின் போது நிபுனர்குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஆராய்ந்து முடுவெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் இதுவரை தமது கோரிக்கைகள் நிறைவேற்றுப்படவில்லை என மரக்கறி வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.