;
Athirady Tamil News

அயா்லாந்தில் அதிபா் தோ்தல்

0

அயா்லாந்தில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்தலில் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா் கேதரின் கானலி மிகப்பெரிய வெற்றி பெறுவாா் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. தோ்தலில் இருந்து அவா் விலகியதாக கடைசி நேரத்தில் வெளியான போலி விடியோ காரணமாக அவரின் பிரசாரம் பெரும் பாதிப்பை சந்தித்தது.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவான தீவிர நிலைப்பாடு, சமூக நீதிக்கான அா்ப்பணிப்பு, ஐரோப்பிய யூனியனை ராணுவமயாக்கக் கூடாது என்ற கொள்கை ஆகியவற்றைக் கொண்ட கானலி, 2016 முதல் கால்வே வெஸ்ட் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.