காவல்துறை துப்பாக்கி சூட்டில் 64 பேர் உயிரிழப்பு – 46 பள்ளிகளுக்கு விடுமுறை
காவல்துறை மற்றும் போதைக்கும்பலுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
64 பேர் உயிரிழப்பு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த திட்டமிட்ட காவல்துறை கடந்த ஒரு ஆண்டுகாலமாக திட்டமிட்டு வந்தது.
இதன்படி, நேற்று 2500க்கும் அதிகமான காவல்துறையினர் இணைந்து, போதைப்பொருள் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கினர்.
இந்த நடவடிக்கையின் போது போதைக்கும்பல் காவல்துறையினர் மீது துப்பாக்கிசூடு நடத்திய நிலையில், காவல்துறையினர் பதில் தாக்குதல் தொடுத்தனர்.
இந்த தாக்குதலில், போதைக்கும்பலை சேர்ந்த 60 பேர் மற்றும் காவல்துறையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், போதைக்கும்பலை சேர்ந்த 81 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
46 பள்ளிகளுக்கு விடுமுறை
மேலும், இந்த நடவடிக்கையின் போது போதைக்கும்பல் காவல்துறையினர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது.
தற்போது அந்த நகரில் பெரும் பரபரப்பு நிலவி வருவதால், அங்குள்ள 46 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்தில், ரியோவில் காலநிலை மாற்றங்களை கையாளும் மேயர்களின் உலகளாவிய உச்சி மாநாடு, இளவரசர் வில்லியம் கலந்து கொள்ள நிகழ்வு உள்ள நிலையில், இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.