NPP உறுப்பினருக்கு கொலை மிரட்டல்
ஹோமாகம பிரதேச சபை தவிசாளரும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான கசுன் ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி, நண்பகல் அலுவலகத்தில் பொதுமக்கள் தினத்தை நடத்திக்கொண்டிருந்தபோது அலுவலக கைப்பேசிக்கு அழைப்பெடுத்து ஹந்தயா என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவராலேயே இக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
NPP உறுப்பினருக்கு கொலை மிரட்டல் | Death Threat To Npp Member
. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, இதன் ஆரம்பக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.