;
Athirady Tamil News

வீடு புகுந்த கொள்ளையனால் பார்வையை இழந்த பெண்; அனுராதபுரத்தில் சம்பவம்

0

அநுராதபுரம், கல்னேவ பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்த கொள்ளையன், பெண் ஒருவரின் முகத்தில் ஒருவித பவுடரை தெளித்ததால்,அவர் தனது பார்வையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் ள் புகுந்த கொள்ளையன் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளார்.

பல நாட்கள் சிகிச்சை

சம்பவத்திற்கு பின்னர் பாதிக்கப்பட்ட பெண், அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பெண்ணின் கண்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்னேவ, தம்புத்தேகம, இபலோகம மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட பல பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகள் உட்பட பல இடங்களில் சந்தேக நபர் கொள்ளை மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இரவும் பகலும் சுற்றித் திரிந்த கொள்ளையனின் நடவடிக்கைகள் பல நாட்களாக அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. இநிலையில் கைதான கொள்ளையனிடம் , ​​உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றையும் பொலிஸா் பறிமுதல் செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.