அமெரிக்க வரலாற்றின் மிக நீண்ட அரச நிர்வாக முடக்கத்த்திற்கு முடிவு
வரலாற்றின் மிக நீண்ட அரச நிர்வாக முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்க ஜனநாயக கட்சி செனட்டர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குழு, குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் செனட்டில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், அமெரிக்கா முழுவதும் அரச சேவைகள் மீண்டும் முழுமையாக ஆரம்பிக்கப்படுவதற்கு வழி வகுக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதற்கான காலம் எல்லை குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.