;
Athirady Tamil News

குடிநீர் அல்ல… சேற்று நீர்! – கிளிநொச்சியில் குழாய் நீர் விநியோகம் குறித்து மக்கள் கொந்தளிப்பு!

0

கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.

நகர்ப்பகுதி, பரவிப்பாஞ்சான், திருநகர், பரந்தன், பூநகரி போன்ற பிரதேசங்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சேற்று நீரின்நிறத்திலும் மணத்திலும் காணப்படுகின்றது என்றும். குழாய் வழி நீரையே குடிநீர் உட்பட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்துகின்ற தாம் இதனால் தாம் பெரிதும் சிரமப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமற்ற வகையில் விநியோகிப்படுகின்ற நீர் தொடர்பில் ஆதாரங்களுடன் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், தெரிவித்துள்ள மக்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். பொது மக்களின் இக் குற்றச்சாட்டு தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் தொடர்பு கொண்டு வினவியபோது மாவட்டத்திற்கு இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒன்று புதிதாக நவீன தொழிநுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் 2வது
பாரம்பரிய முறையிலான பழைய நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது பெய்த மழை காரணமாக கிளிநொச்சி குளத்தின் நீரில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அதிகளவு சேற்று நீர் குளத்தை வந்தடைந்தமையால் பழைய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக அவற்றை முழுமையாக சுத்திகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மாவட்டத்தின் ஒரு பகுதி பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற நீர் கலங்கிய நீராக காணப்படுகின்றது. ஆனால் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக விநியோகிக்கப்படும் நீரில் இவ்வாறான நிலைமை ஏற்படுதில்லை.

இருப்பினும் கிளிநொச்சி முழுவதற்கும் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நீரை விநியோ கிப்பதற்கு அதன் கொள்லளவு போதுமானதாக இல்லை.

தம்மால் விநியோகிக்கப்படுகின்ற நீரின் தரம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் அச்சமின்றி பயன்படுத்த முடியும்.

அத்தோடு தற்காலிக ஏற்பாடாக மாவட்டம் முழுவதற்கும் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகம் மாற்றப்பட்டுள்ளது என்றும் ஆனாலும் மக்களின் பாவனைக்கு ஏற்ப முழுமையாக வழங்க முடியாத நிலை காரணமாக மட்டுப்படுத் தபட்ட நீர் விநியோகமே மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.