விகாரையில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதி மாணிக்கக் கற்கள் திருட்டு
கண்டி – தலுகொல்ல ரஜமஹா விகாரைக்கு சொந்தமான விகாரை ஒன்றிலிருந்த விலையுயர்ந்த மாணிக்கக் கற்கள் திருடப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் விகாரையின் விகாராதிபதி கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
ஒன்றரை கோடி ரூபா பெறுமதி
சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விகாரையில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராக்களை சொதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
திருட்டு சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.