உங்களுக்கு எத்தனை மனைவிகள்? டிரம்ப் கேள்வியால் திகைத்த சிரிய ஜனாதிபதி
வெள்ளை மாளிக்கைக்கு வருகை தந்த சிரிய ஜனாதிபதியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” என கேட்ட சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் நகைத்துள்ளனர்.
சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து பேசினார்.
சிரிய ஜனாதிபதி ஒருவர் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தது இதுவே முதல்முறையாகும். வெள்ளை மாளிகையில் இரு நாட்டு ஜனாதிபதிகளின் சந்திப்பானது நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது, சிரிய ஜனாதிபதிக்கு வாசனைத் திரவியத்தை ஜனாதிபதி ட்ரம்ப் பரிசளித்தார். அப்போது, “இது ஆண்களுக்கான வாசனைத் திரவியம், இதோ,” என்று ட்ரம்ப் சிரிய ஜனாதிபதியிடம் கூறினார்.
மேலும் அவர் அந்த வாசனைத் திரவியத்தை சிரிய ஜனாதிபதி மீது தெளித்து, “இது மிகச் சிறந்த வாசனைத் திரவியம்” என்று கூறினார்.
Lmaooo. Trump gave the President of Syria a bottle of Trump cologne earlier this week when he visited the White House.
“The other one is for your wife. How many wives?”
“One.”
“With you guys, I never know.” 🤣pic.twitter.com/3mUqwCIxva
— johnny maga (@_johnnymaga) November 12, 2025
பின்னர் அவர், “மற்ற வாசனைத் திரவியங்கள் உங்கள் மனைவிக்கானது. உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” என்று ட்ரம்ப் கேட்க, அவரும் ஒன்றே ஒன்று தான் என பதிலளித்ததால் உலகத் தலைவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
இதுதொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.