;
Athirady Tamil News

ஐ.நா அமைதிப் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல்: UNIFIL வெளியிட்ட கண்டன அறிக்கை

0

ஐ.நா அமைதிப் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக UNIFIL அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

அமைதிப் படையினர் மீது தாக்குதல்
லெபனானின் தெற்கு பகுதியில் செயல்பட்டு வந்த ஐ.நா அமைதிப் படையினர் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்துவதாக ஐக்கிய நாடுகளின் இடைக்கால படை(UNIFIL) வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

ஐ.நாவின் தூதுக்குழு X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், லெபனான் நாட்டின் எல்லைக்குள் இஸ்ரேலிய படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள மெர்காவா(merkava tank) டாங்கியில் இருந்து இஸ்ரேலிய படை வீரர்கள் ஐ.நாவின் அமைதிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளது.

இந்த அத்துமீறிய துப்பாக்கிச் சூட்டின் போது கனரக துப்பாக்கிகளின் தோட்டாக்கள் அமைதிப் படையினரின் கால்களுக்கு அருகே விழுந்ததாகவும், இதையடுத்து அமைதிப்படையினர் அப்பகுதியில் இருந்த தடுப்புகளை நோக்கி ஓட வேண்டியது இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் தப்பிய அமைதிப் படையினர்

இஸ்ரேலிய படைகளின் மெர்காவா டாங்குகள் அப்பகுதியை விட்டு வெளியேறிய 30 நிமிடங்களுக்கு பிறகே, அமைதிப்படையினர் தடுப்புகளை விட்டு வெளியேறிய முடிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தாக்குதலில் ஐ.நா அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை UNIFIL கண்டித்து இருப்பதுடன், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701-ந் கடுமையான மீறல் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் அமைதிப் படையினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தரப்பு மறுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.