அரிசி மூட்டைகளுடன் தடம்புரண்ட லொறி ; தமிழர் பகுதியில் சம்பவம்
வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.
17ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆரம்ப கட்ட விசாரணைகள்
தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலையாலும் வாகனத்தின் அதிக வேகம் காரணமாக தடம் புரண்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
எனினும் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எதுவித ஆபத்துகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.