;
Athirady Tamil News

போர் அச்சுறுத்தல் விடுக்கும் ஜப்பான்… ஐக்கிய நாடுகள் மன்றத்தில் முறையிட்ட சீனா

0

தைவான் தொடர்பில் ஜப்பான் உடனான மோதலை ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது சீனா.

தற்காத்துக் கொள்ளும்
தைவான் விவகாரத்தில் ஜப்பான் போர் அபாயத்தை ஏற்படுத்துவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இரண்டு வாரங்களாக நீடிக்கும் சர்ச்சையில், இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான மொழியில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்றும் சீனா சபதம் செய்துள்ளது.

சீனாவின் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான தூதர் ஃபூ காங் வெள்ளிக்கிழமை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு எழுதிய கடிதத்தில்,

தைவான் மீதான சீனாவின் இராணுவ நடவடிக்கையானது ஜப்பானை இராணுவ எதிர்வினையாற்றும் வகையில் தூண்டக்கூடும் என்று கூறியதன் மூலம் ஜப்பானியப் பிரதமர் சானே தகைச்சி சர்வதேச சட்டம் மற்றும் தூதரக விதிமுறைகளின் கடுமையான மீறலை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் தனது இராணுவத்தை இந்த விவகாரத்தில் களமிறக்கும் என்றால், அது ஒரு ஆக்கிரமிப்புச் செயலாகும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகளின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் சீனா தனது தற்காப்பு உரிமையை உறுதியாகப் பயன்படுத்தும், அத்துடன், அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியாகப் பாதுகாக்கும் என்றும் ஃபூ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு நெருக்கடி
ஜனநாயக ரீதியாக நிர்வகிக்கப்படும் தைவானை சீனா அதன் சொந்தப் பிரதேசமாகக் கருதுகிறது மற்றும் தீவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதையும் சீனா நிராகரிக்கவில்லை.

ஆனால், சீனாவின் இந்த உரிமைகோரலை தைவான் தொடர்ந்து மறுத்து வருகிறது. அங்குள்ள மக்களே அதை முடிவு செய்வார்கள் என்றும் பதிலளித்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு ஃபூ எழுதிய கடிதமானது, கடந்த பல ஆண்டுகளில் மிகப்பெரிய இருதரப்பு நெருக்கடியில் சீனாவின் மூத்த அதிகாரியிடமிருந்து தகைச்சிக்கு எதிரான கடுமையான விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், தைவான் விவகாரத்தில் இராணுவத்தைக் களமிறக்குவதில் ஜப்பான் பிரதமர் ஒருவருக்கு சட்டச் சிக்கல்கள் உள்ளது. இருப்பினும், தகைச்சியின் கருத்தை ஜப்பான் அரசாங்கம் ஆதரிப்பதுடன், அது தங்களின் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.