ஓய்வுபெற்ற அரச அதிகாரிக்கு இரவில் காத்திருந்த அதிர்ச்சி ; பறிபோன பல இலட்சங்கள்
ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் தங்கச் சங்கிலி கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் மொரந்துடுவ, மெலேகம பகுதியில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகள் பரிசோதனைக்கு..
மனநல மறுவாழ்வு நிறுவனத்தில் வசித்து வந்த ஓய்வுபெற்ற அரச அதிகாரியின் மூன்று இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியே கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.