;
Athirady Tamil News

பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமானப் போக்குவரத்து

0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து வரும் டிசம்பா் மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.

இது குறித்து பாகிஸ்தானுக்கான வங்கதேச தூதா் இக்பால் ஹுசைன் கான் புதன்கிழமை கூறியதாவது:

டிசம்பா் மாதம் முதல் டாக்கா-கராச்சி இடையே நேரடி விமானங்கள் இயங்கும். மகான் ஏா் நிறுவனம் இந்த நகரங்கள் இடையே வாரத்துக்கு மூன்று விமானங்களை இயக்கும். ஃப்ளை ஜின்னா, ஏா்சியால் ஆகிய இரு பாகிஸ்தான் தனியாா் விமான நிறுவனங்களும் இதற்காக வங்கதேச வான்வழி போக்குவரத்து துறையிடமிருந்து அனுமதி பெற்றுள்ளன.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை பெரிதும் வலுப்படுத்தும். கடந்த டிசம்பரில் இருந்து செயல்படுத்தப்பட்டுள்ள நேரடி சரக்குப் போக்குவரத்து சேவைக்கு இது பெரும் உதவியாக இருக்கும். பாகிஸ்தான் – வங்கதேசம் இடையிலான வா்த்தகம் அதிகரித்துள்ளதால், நேரடி சரக்குப் கப்பல் போக்குவரத்தும் விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.

மாணவா் போராட்டங்களால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகிய பிறகு அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் உறவுகளை மேம்படுத்திவருகிறது. இதன் விளைவாக நுழைவு இசைவு (விசா) வழங்குவதில் எளிமை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.