;
Athirady Tamil News

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடல்

0
video line-

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில் குறித்த வீதியை மூடியுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாகவும் கடல் கொந்தளிப்பு காரணமாகவும் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகின்றது.

இதனால் அப்பகுதியில் உள்ள வள்ளங்கள் தோணிகள் படகுகளை கரையை நோக்கி மீனவர்கள் நகர்த்தி வருகின்றனர்.

மேலும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்கள் வீண் பொழுது போக்கு விடயங்களுக்காக இப்பகுதிக்கு வருகை தருவதை தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.