முதியோர் இல்லத்தில் பெரும் துயரம்; 11 பெண்கள் உயிரிழப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையில் நீர்கொழும்பு பன்னல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் முதியோர் இல்லமொன்றில் 11 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை டிட்வா ப்புயலின் தாக்கத்தினால் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை இந்த அனர்த்தங்களில் சிக்கி 176 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.