இந்தியாவின் 2ஆவது விமானமும் கொழும்பை வந்தடைந்தது!
இலங்கையில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் இரண்டாவது விமானமும் சனிக்கிழமை (29) கொழும்பை வந்தடைந்துள்ளது.
இன்று (29) அதிகாலை , இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்த நிலையில் தற்போது இராண்டாவது விமானமும் நிவாரண பொருட்களுடன் நாட்டை வந்தடைந்துள்ளது.