;
Athirady Tamil News

ஒரே நேரத்தில் 2,000 ஏவுகணைகளை ஏவ திட்டமிடும் ஈரான் – இஸ்ரேல் எச்சரிக்கை

0

ஈரான், ஒரே நேரத்தில் 2,000 ஏவுகணைகளை ஏவத் திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியை மிக வேகமாக மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேல் தாக்குதலால் பல உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்திருந்தாலும், தற்போது ஈரான் “24 மணி நேரமும் இயங்கும் தொழிற்சாலைகள்” மூலம் தனது திறனை மீட்டெடுத்துவருகிறது.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரக் குழுவில் நடைபெற்ற ரகசிய கூட்டத்தில், உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர், “ஈரான் எதிர்கால மோதலில் ஒரே நேரத்தில் 2,000 ஏவுகணைகளை ஏவத் திட்டமிடுகிறது” என எச்சரித்துள்ளார்.

மேற்கு நாடுகளின் தூதர்கள், ஈரான் தனது திட எரிபொருள் உற்பத்தி திறனை விரைவாக மீட்டெடுக்க முயற்சிக்கிறது எனக் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, இஸ்ரேல் “planetary mixers” எனப்படும் முக்கிய உற்பத்தி கருவிகளை தாக்கியதால், ஈரான் பழைய முறைகளைப் பயன்படுத்தி எரிபொருள் தயாரிக்கிறது.

International Crisis Group-ன் ஈரான் திட்ட இயக்குநர் அலி வாஏஸ், “ஈரான் தனது ஏவுகணை திறனை விரைவாக மேம்படுத்துகிறது. இது, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளை ஒரே நேரத்தில் தாக்கி அதிக சுமையால் செயலிழக்கச் செய்யும் நோக்கத்துடன் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

இது, ஈரான்-இஸ்ரேல் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஈரான் கடந்த போரில் 500 ஏவுகணைகளை ஏவியிருந்தது.

இப்போது, 2,000 ஏவுகணைகள் ஒரே நேரத்தில் தாக்கப்படும் என்றால், அது பிராந்திய பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.