;
Athirady Tamil News

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,000 லீற்றர் டீசல் ; பறிமுதல் செய்த போலீசார்

0

அனுமதிப்பத்திரமின்றி பாரவூர்தி ஒன்றில் மறைத்து கடத்திச் செல்லப்பட்ட சுமார் 6 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய டீசல் தொகையை கொட்டாஞ்சேனை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட இந்தசோதனை நடவடிக்கையிலேயே டீசல் கைப்பற்றப்பட்டது.

பாரவூர்தியை சோதனையிட்ட போது, அதற்குள் தலா 200 லீற்றர் கொள்ளளவு கொண்ட 10 பீப்பாய்களில் மொத்தம் 2,000 லீற்றர் டீசல் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

டீசல் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பாரவூர்தி என்பன காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை கொட்டாஞ்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.