நாயாறு பாலம் வழியாக பயணிக்கும் பொதுமக்களுக்கான அறிவித்தல்
நாயாறு பாலத்தின் திருத்தப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன என்று முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது சில சிறிய பணிகள் மட்டும் மீதமுள்ளன அவையும் நாளைய தினத்திற்குள்(7) முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களுக்கான அறிவித்தல்
தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு, RDA (Road Development Authority) நாயாறு பாலம் வழியாக பொதுமக்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதனால், நாயாறு பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள், • பாலத்தின் எந்த இடத்திலும் வாகனங்களை நிறுத்த வேண்டாம் • பாலத்தை ஒரு வழிப் பாதையாக (One-way) மட்டும் பயன்படுத்தவும் மேலும், சில பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன என்பதையும் தயவுசெய்து கருத்தில் கொள்ளவும் என அறிவித்துள்ளது.