;
Athirady Tamil News

முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

0

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த விபரங்கள் இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டன.

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு நடவடிக்கைகள் இன்றுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.

மேல் நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை விடுக்கப்படும்போது, அங்கு முன்னிலையாகுமாறு சந்தேகநபரான சாமர சம்பத் தசநாயக்கவிற்கு நீதவான் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.