;
Athirady Tamil News

ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவு ; இரண்டு வாரங்களில் 30 பேர் பலி

0

ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு பனிப் பொழிந்து வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் 30 பேர் பலியாகி உள்ளனர்.

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது.

இதில் ஆமோரி, நிகாட்டா, ஹொக்கைடோ, அகிதா உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமோரியின் சில பகுதிகளில் 14 அடி வரை பனி குவிந்துள்ளது. இது 40 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவாகும்.

வீடுகள், கடைகள், அலுவலகங்களை பனி சூழ்ந்துள்ளது. பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு கட்டட மேற்கூரைகளில் படிந்திருக்கும் பனியை அகற்றும் போதும், பனியில் புதைந்தும், அதிக குளிராலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த இரு வாரத்தில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பனி தொடர்பான விபத்துகளில், 290 பேர் காயமடைந்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.