புலிக்குட்டியை பயத்தில் உறைய விட்ட நாய்கள் ; பீதியில் மரத்தில் குடியேறிய புலி
பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியொன்றில் நாய்கள் கூட்டமாக சிறுத்தைக் குட்டியொன்றைத் துரத்திய வேளையில், அந்த சிறுத்தைக் குட்டி பயத்தில் அருகில் இருந்த மரத்தில் ஏறிய காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.
சிறுத்தையின் செயலை நேரில் பார்த்த தோட்டத் தொழிலாளி தெரிவிக்கையில்,
வேட்டையாட முயற்சி
சிறுத்தையொன்றும் அதன் குட்டியும் அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்காக, தேயிலைத் தோட்டத்துக்குள் நுழைந்தன. அப்போது அந்த சிறுத்தை, நாய் ஒன்றை வேட்டையாட முயன்றுள்ளது
அவ்வேளை அருகிலுள்ள பல நாய்கள் ஒன்றுகூடி சிறுத்தையையும் அதன் குட்டியையும் துரத்தியுள்ளன. துரத்தி வரும் நாய்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள் சிறுத்தைக் குட்டி அருகில் இருந்த மரத்தில் ஏறியதாகவும் குட்டிக்கு காவலாக தாய் சிறுத்தையும் அருகில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், நாய்கள் அங்கிருந்து சென்றதும் சிறுத்தைக் குட்டி பாதுகாப்பாக மரத்தில் இருந்து கீழே இறங்கி, தேயிலைத் தோட்டத்தின் வழியாக தாயுடன் நடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.