;
Athirady Tamil News

இங்கிலாந்தில் பரபரப்பு; பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் குத்திக்கொலை

0

இங்கிலாந்தில் லெஸ்டர் (Leicester) நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை சந்தேகத்தின் பேரில் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 ஆம் திகதி மாலை , ஆக்ஸ்போர்டு தெருவில் (Oxford Street) ஒருவர் மயங்கி விழுந்து கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இரு நபர்களுக்கு இடையே வாக்குவாதம்
சுமார் 20 வயதுகளில் இருக்கும் அந்த நபர் உடனடியாக (Leicester Royal Infirmary ) லெஸ்டர் ராயல் இன்ஃபர்மரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் ப உயிரிழந்ததாக லெஸ்டர்ஷையர் (Leicestershire) காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலேயே பணிபுரியும் மென்பொருள் பொறியாளர் ஒருவர் கூறுகையில்,

“வேலை முடிந்து வெளியே வந்தபோது, ஒருவர் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டேன் எனவும் சுமார் 12 முதல் 17 பேர் வரை அவரைச் சூழ்ந்து நின்று, கோட்டுகளால் போர்த்திக் கொண்டிருந்தனர் எனவும் பொதுமக்களில் ஒருவர் அவருக்கு முதலுதவி (CPR) அளித்துக்கொண்டிருந்தார்,” எனவும் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக ஆக்ஸ்போர்டு தெருவில் இரு நபர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக பொலிஸார் சந்தேகிப்பதுடன் சிசிடிவி (CCTV) காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் அல்லது வீடியோ பதிவுகள் வைத்திருப்பவர்கள் முன்வந்து தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.