பொலிசாருக்கு 32 வயது பெண் கொடுத்த அதிர்ச்சி!
பொரலஸ்கமுவ – நிர்மல மாவத்தை பகுதியில் உள்ள வீடமைப்பு தொகுதி ஒன்றில் காவல்துறை மேற்கொண்ட விசேட சோதனையின் போது, 200 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய பெண் ஒருவர் எனவும் அவரிடமிருந்து சுமார் 17 கிலோகிராம் எடையுள்ள ஹஷீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஹஷீஸ் போதைப்பொருள் பெறுமதி சுமார் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரான பெண் போதைப்பொருட்களை விற்பனைக்காக அல்லது விநியோகிப்பதற்காக வைத்திருந்தாரா என்பது குறித்து காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.