ஈரானின் அணுமின் நிலையம் 3வது முறை தாக்குதல்; அணுப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை
ஈரானின் Bushehr அணுமின் நிலையம் மூன்றாவது முறையாகத் தாக்கப்பட்டதாக ஈரான் அணுசக்தி அமைப்பு (AEOI) தெரிவித்துள்ளது.
எனினும் தாக்குதலில் இதுவரை அந்த நிலையத்தில் எந்த பொருள் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
மின் உற்பத்தி நிலையத்தின் நிலை இயல்பாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bushehr அணுமின் நிலையம் பெருமளவு அணுப் பொருட்களுடன் இயங்கி வருகிறது, மேலும் ஈரானின் Bushehr அணுமின் நிலையத்திற்கு ஏற்படும் சேதம் அணுப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.