;
Athirady Tamil News

இந்தியாவின் பிரபல பல்கலையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ; பேராசிரியர் செய்த செயல்

0

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மாலை சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் ‘பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு நேரடியாகவும், தொலைபோசியில் பேசியும் பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்றும், விஷயத்தை வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்’.

பேராசிரியர் மீது நடவடிக்கை
இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், துணிச்சலாக வந்து புகார் அளித்த மாணவியை பாராட்டியும், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழகம் அருகே மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.