யாழ்ப்பாணத்தில் தனது குடும்பத்தினரின் பங்களிப்புடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரை தாம் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் , மாணவர்கள் , இளைஞர்கள் ஆகியோரை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஒருவர் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவதாக, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் நடமாட்டம் தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த எடுத்து சென்ற நிலையில் , பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தனது வீட்டில் வைத்தும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை என்பவற்றில் ஈடுபட்டு வருவதாகவும் , அதற்கு குடும்பத்தினரும் ஒத்துழைத்துள்ளதாகவும் தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.