;
Athirady Tamil News

மத்திய கிழக்கை சூழும் பதற்றம் ; ட்ரம்பை சந்திக்க தயாராகும் நெதன்யாகு

0

அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டனுக்குச் செல்கிறார்.

ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை விரிவுப்படுத்துமாறு ஜனாதிபதி ட்ரம்ப்பை வலியுறுத்தும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுசக்தி திட்டம்
ஈரானின் யுரேனியம் வளங்களை நிறுத்த வேண்டும், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என இஸ்ரேல் நீண்ட காலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

ஆனால், இதனை நிராகரித்து வரும் ஈரான் அரசு அணுசக்தி திட்டத்தில் சில வரம்புகளைக் கொண்டு வருவதற்கு மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளது. இதையடுத்து, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பல அதிரடி நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றது.

இந்த நிலையில், ஈரான் அரசின் தலைவர்கள் சில முக்கிய விவகாரங்களில் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் முதல் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் போராட்டங்களைத் தொடர்ந்து ஈரான் அதன் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.