;
Athirady Tamil News

அர்ஜெண்டினாவில் சிறார் குற்றவாளிகளின் வயது 14 ஆக குறைப்பு

0

அர்ஜென்டினாவில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் குற்றச் செயல்க ளைக் கட்டுப்படுத்த, அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன் படி, சிறார் குற்றவாளிகளாக கருதப்படும் வயது வரம்பை 16-லிருந்து 14 ஆக குறைக்கும் மசோதாவை அதிபர் ஜேவியர் மிலே தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேற்றியது.

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் சிறுவர்களைப் பயன்படுத்தி படு கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச் சர் பாட்ரிசியா புல்ரிச் தெரிவித்தார்.

இந்த மசோதா தற்போது செனட் சபையின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. ஒருபுறம் மக்கள் இதனை வரவேற்றாலும், மனித உரிமை ஆர்வலர்கள் சிறார்களைச் சிறையில் அடைப்பதால் அவர்களின் எதிர்காலம் சிதைந்துவிடும் என கவலை தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.