;
Athirady Tamil News

நாகினியாக மாறிய பெண் ; அறையில் கிடந்த பொருட்களால் திகிலில் உறைந்த கிராமம்

0

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம், அவுரையா (ஔரையா) மாவட்டம், சிங்கனூர் (சிங்கன்பூர்) கிராமத்தில் நாகினியாக மாறிய பெண் காதலனுடன் ஓட்டமெடுத்த சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சியடைச் செய்தது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்ள் குறிப்பிட்டுள்ளதாவது, உத்தர பிரதேச சிங்கனூரின் ரீனா என்ற இளம்பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கச் சென்றார்.

ஆடைகள், வளையல்கள், குங்குமம்
மறுநாள் காலையில் அவர் அறையிலிருந்து வெளியே வராததால், பெற்றோர் சந்தேகம் அடைந்து அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு ரீனா இல்லை. ஆனால், அவரது ஆடைகள், வளையல்கள், குங்குமம் போன்ற பொருட்கள் படுக்கையில் அடுக்கப்பட்டிருந்தன.

அதோடு அருகில் ஐந்தடி நீளமுள்ள பாம்பின் உரித்த தோல் (snake skin அல்லது கென்சுலி) கிடந்தது. அண்மைக் காலமாக ரீனா, தூங்கும்போது பாம்பு தன்னைச் சுற்றிக் கொள்வதாக பெற்றோரிடம் கூறி வந்திருந்தால் அவர் நாகினியாக மாறிவிட்டதாக ஊரவர்களும் பெற்றோரும் நம்பியுள்ளனர்.

இந்நிலையில் மகளை காணதால் அதிர்ச்சியடைத்த பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் உடனடியாகவே இது இயற்கைக்கு மாறானது அல்ல என்று தெரிவித்தனர். பாம்பின் உரித்த தோலும், ஆடைகளும் யாரோ திட்டமிட்டு அடுக்கி வைத்திருப்பது போலத் தெரிந்தது.

ரீனாவிடம் தனி மொபைல் இல்லை என்று பெற்றோர் கூற, அவர்களது போனைப் பெற்று சோதித்த பொலிஸார், ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு அடிக்கடி அழைப்புகள் சென்று வந்ததை கண்டறிந்தனர்.

அந்த எண் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடையது என்பது தெரியவந்தது. அவரும் காணாமல் போயிருந்தார். ரீனாவும் அந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

பெற்றோர் ரீனாவுக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடு செய்திருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ரீனா பாம்பு தன்னைச் சுற்றுவதாக நாடகமாடி வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன், வயல் பகுதியில் பாம்பின் உரித்த தோலைத் தேடியதை கிராமத்தினர் கவனித்திருந்தனர்.

கடந்த 08 ஆம் திகதி இரவு, பெற்றோர் தூங்கிய பின்னர், ரீனா திட்டமிட்டபடி தனது ஆடைகள், வளையல்கள், குங்குமம் பாம்பின் உரித்த தோலை அடுக்கி வைத்துவிட்டு, காதலனுடன் தப்பிச் சென்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.