;
Athirady Tamil News

அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.3 ஆக பதிவு

0

நியூயார்க்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆலூதியான் தீவு பகுதியருகே இன்று காலை 11 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது.

இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், நிகோல்ஸ்கி நகரில் இருந்து தென்மேற்கே 93 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 19.9 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் பெரிங் கடல் பகுதியில் ஏற்பட்டு உள்ளது.

ஆனால், சுனாமி எச்சரிக்கை எதனையும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் பிறப்பிக்கவில்லை. இதனால், பொருளிழப்புகளோ, கட்டிட இடிபாடுகளோ அல்லது யாருக்கும் பெரிய பாதிப்புகளோ ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

எனினும், இதன்பின்னர் நிகோல்ஸ்கி நகரில் இருந்து 85 கி.மீ. தென்மேற்கே மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 3.4 ஆக பதிவானது. இதேபோன்று தெற்கு கலிபோர்னியா கடலோரம் பசிபிக் பெருங்கடலில் 3.5 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.