;
Athirady Tamil News

அஸ்வெசும நலன்புரித் திட்ட பயனாளிகளுக்கு வெளியான நற்செய்தி

0

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழான முதியோர் கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவுக்காக 31 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், சுமார் 89 இலட்சத்து 375 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒதுக்கப்பட்ட நிதியானது இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.