;
Athirady Tamil News

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் ; நெதன்யாகு கதி என்ன?

0

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெஞ்சமின் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா இல்லையா என தெரியவில்லை என ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் உட்ச தலைவர் கமெனி கொல்லப்பட்டார். இதற்கு ஈரான் தற்போது பதிலடி கொடுத்து வருகிறது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், பதில் தாக்குதலை ஈரானும் தீவிரப்படுத்தியுள்ளது.

நெதன்யாகு கதி என்ன – தாக்குதலை மறுக்கும் இஸ்ரேல்
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் நெதன்யாகு கதி என்ன என்று தெரியவில்லை என்றும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானில் உள்ள துணை ராணுவ இஸ்லாமிய புரட்சிகர காவல்படை திங்களன்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் இஸ்ரேலிய விமானப்படை தளபதியின் தலைமையகத்தை குறிவைத்ததாகக் கூறியது.

“சியோனிச ஆட்சியின் குற்றவியல் பிரதமரின் அலுவலகம் மற்றும் ஆட்சியின் விமானப்படை தளபதியின் தலைமையகம் குறிவைக்கப்பட்டன,” என்று ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் ஈரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதலால் தாக்கப்பட்டதாக கூறப்படும் செய்தியை இஸ்ரெல் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை கடந்த பெப்ரவரி 28-ந்தேதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானில் உள்ள ரெட் கிரசெண்ட் என்ற தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.