உலகில் பெரும் உயர்வை சந்தித்த விலைகள் ; யாழில் எரிவாயுவிற்காக மக்கள் செய்த செயல்
யாழ்பாணத்தில் தொடர்ந்தும் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில் நேற்றைய தினம் ஒரு தொகை லாப்ஸ் (Laugfs) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் வரிசையில் முண்டியடித்து பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஈரான் எடுத்துள்ள அதிரடி முடிவுகளால் இயற்கை எரிவாயுவின் விலைகளும் சர்வதேச சந்தையில் செங்குத்தாக உயரத் தொடங்கியுள்ளது.
எரிவாயு விலை
ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடபட்டதன் பின்னர் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்ட தடங்கலாலும் ஏனைய பிற காரணிகளாலும் சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் பெரும் உயர்வை சந்தித்துள்ளன.
அத்துடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இஸ்ரேலில் சில எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டிருப்பது நெருக்கடி நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அதேசமயம் ஐரோப்பாவில் குளிர்காலம் முடிவுக்கு வருவதால் எரிவாயு பயன்பாடு குறைந்தாலும், அங்குள்ள இருப்பு மிகவும் குறைவாக உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் கோடை காலத்தில் இந்த இருப்பை மீண்டும் நிரப்ப வேண்டியுள்ளதால், தற்போதைய விலை உயர்வு ஐரோப்பாவுக்கும் பெரும் சவாலாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.