;
Athirady Tamil News

இஸ்ரேல் தாக்குதல்! லெபனானில் 30,000 பேர் இடமாற்றம் – ஐ.நா. தகவல்!

0

லெபனான் நாட்டின் மீதான் இஸ்ரேலின் தாக்குதல்களால் அங்கு வசிக்கும் சுமார் 30,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் அந்நாட்டின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் வீட்டின் மீது கடந்த சனிக்கிழமை (பிப். 28) நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் தளங்களின் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு மிகப் பெரியளவில் மோதல்கள் வெடித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹவுதி கிளர்ச்சிப் படைகளும் களமிறங்கியுள்ளன. இதனால், மத்திய கிழக்கு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்கள் நடைபெறும் லெபனான் பகுதிகளில் வசித்து வரும் 30,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இத்துடன், இஸ்ரேல் எல்லையில் வசிக்கும் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்காக லெபனானில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென இஸ்ரேல் ராணுவத்திற்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.