;
Athirady Tamil News

பாணந்துறை இளைஞர்களுக்காக கிழக்கில் உள்ள சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து நீதியை நிலைநாட்டுங்கள்(video)

0
video link-
 
அறுகம்பையில் கைதான பாணந்துறை இளைஞர்களுக்காக கிழக்கில் உள்ள சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து நீதியை நிலைநாட்டுங்கள் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மெளலவி மிப்லால் பகிரங்க அழைப்பு

பொத்துவில் – அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கடந்த வியாழக்கிழமை (30.04.2026) அன்று கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களுக்காக கிழக்கில் உள்ள சட்டத்தரணிகள் இனம், பிரதேச வேறுபாடுகள் பாராமல் மே 06ம் திகதி நீதிமன்றுக்கு சமூகமளித்து அந்த  இளைஞர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

நாளுக்கு நாள் முஸ்லிங்களின் இருப்பு கேள்விக்குறியாகும் நிலை இலங்கையில் உருவாகி வருகிறது. முஸ்லிம் பெயர் தாங்கியவர்களாக, அடையாளம் தாங்கியவர்களாக இருந்தால் அரச பாதுகாப்பு இயந்திரம் உற்றுநோக்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது. பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்கள் பொத்துவில் – அறுகம்பை பிரதேசத்திற்கு கடந்த வாரம் சுற்றுலா சென்று அங்கு உணவருந்தவும், தங்குவதற்கும் நல்ல ஹோட்டல் தொடர்பில் விசாரித்தபோது பிரதேசவாசிகள் இஸ்ரேல் நாட்டவர்கள் தங்கும் பிரதேசம் நல்ல இடம் என்றும் அங்கே தான் நல்ல உயர்ரக ஹோட்டல்கள் இருப்பதாகவும் பரிந்துரைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.